ஆத்திரமூட்டல்களை நாடுகள் தவிர்க்க வேண்டும்..! சீனத் தூதுவரை சந்தித்த ரணில்
அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், சீனத் தூதுவர் சீ சென்ஹொங் (Qi Zhenghong) இற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (04) முற்பகல் அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
”ஒரு சீனா கொள்கை” தொடர்பில் இலங்கையின் கடைபிடிப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு பற்றிய சாசனக் கோட்பாடுகளுக்கான இலங்கையின் அர்ப்பணிப்பையும் குறித்த சந்திப்பில் வலியுறுத்தப்பட்டதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.
ஆத்திரமூட்டல்களை நாடுகள் தவிர்க்க வேண்டும்
மேலும், “ தற்போதைய உலகளாவிய பதட்டங்களை மேலும் அதிகரிக்கும் ஆத்திரமூட்டல்களை நாடுகள் தவிர்க்க வேண்டும்.
பரஸ்பர மரியாதை மற்றும் நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடாமை, அமைதியான ஒத்துழைப்பு மற்றும் மோதலின்மைக்கு ஒரு முக்கிய அடிப்படையாக அமையும் ” எனவும் குறித்த பதிவில் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
Countries must refrain from provocations which further escalate the current global tensions. Mutual respect and non-interference in the internal affairs of countries are important foundations for peaceful cooperation and non-confrontation. (2/2)
— Ranil Wickremesinghe (@RW_UNP) August 4, 2022
