தமிழ் பிரதிநிதிகளை சந்திக்கும் அதிபர் ரணில் - கலந்துரையாடப்படும் முக்கிய விடயங்கள்!
Sri Lankan Tamils
Ranil Wickremesinghe
Government Of Sri Lanka
President of Sri lanka
By Pakirathan
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்புக்கள் இன்றையதினம் இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பானது இன்றும், நாளையும் இரண்டு நாட்களுக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், இன்று (வியாழக்கிழமை) மாலை குறித்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகவுள்ளது.
பேசப்படும் விடயங்கள்
இதேவேளை, இன்றைய குறித்த சந்திப்பில், நல்லிணக்க பொறிமுறைகள், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயங்கள், பயங்கரவாத தடுப்புச் சட்டம், காணி விவகாரம் போன்றவை தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.
மேலும், நாளைய தினம் நடைபெறவுள்ள சந்திப்பில் அதிகாரப் பகிர்வு தொடர்பில் அதிபர் ரணிலுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி