ஆயுர்வேதத்தை மருத்துவ விஞ்ஞானமாக்குவதே எனது நோக்கம்: ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

Ranil Wickremesinghe Sri Lanka Doctors
By Aadhithya Sep 06, 2024 01:30 PM GMT
Report

ஆயுர்வேதத்தை மருத்துவ விஞ்ஞானமாக அங்கீகரிப்பதே தனது நோக்கமாகும் என  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

அதற்காகவே ஆயுர்வேதம் தொடர்பான தேசிய சபையொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பத்தரமுல்ல வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் இன்று வெள்ளிக்கிழமை (06) நடைபெற்ற உள்நாட்டு வைத்தியர்களின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனை கூறியுள்ளார்.

அரசாங்க ஊழியர்களின் பாரிய சம்பள அதிகரிப்பு: தயாராகும் அடுத்த வரவு செலவுத் திட்டம்

அரசாங்க ஊழியர்களின் பாரிய சம்பள அதிகரிப்பு: தயாராகும் அடுத்த வரவு செலவுத் திட்டம்

சுற்றுலாப் பயணிகள்

இந்த மாநாட்டில் மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, “இதற்காக பாரம்பரிய வைத்தியர்களையும் ஒன்றிணைக்க வேண்டும். அவர்களுக்கும் அங்கீகாரம் வழங்க வேண்டும். அதே சமயம் ஜோதிடத்தையும் இதனுடன் இணைக்க வேண்டும்.

ஆயுர்வேதத்தை மருத்துவ விஞ்ஞானமாக்குவதே எனது நோக்கம்: ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க | President Ranil On Ayurvedic

இவை அனைத்தும் பின்னிப் பிணைந்தவை. இவற்றை பிரிக்க முடியாது. அதற்கு அமைவாக புதிய கட்டமைப்பைத் உருவாக்க வேண்டும். இந்தத் துறைகள் அனைத்தையும் அங்கீகரித்து அவற்றைப் பதிவு செய்ய புதிய சடடமொன்றை கொண்டு வர எதிர்பார்க்கிறோம்.

இந்தத் துறையின் முன்னேற்றத்திற்காக நீண்ட காலத் திட்டங்களையும் ஐந்தாண்டுத் திட்டத்தையும் வகுக்க எதிர்பார்க்கிறோம். ஆயுர்வேத மருத்துவத்திற்கு, மருத்துவ அறிவியலாக அங்கீகரிப்பை பெற்றுக்கொடுப்பதே எனது நோக்கம். அதன்படி, இந்த மருத்துவ முறைகளைத் தேடி சுற்றுலாப் பயணிகள் நம் நாட்டிற்கு வருகிறார்கள்.

தாபால் மூல வாக்களிப்பு தொடர்பில் வெளியான சுமூகமான தகவல்

தாபால் மூல வாக்களிப்பு தொடர்பில் வெளியான சுமூகமான தகவல்

ஆயுர்வேத சிகிச்சை

தாய்லாந்து (Thailand) போன்ற நாடுகளில் உள்ள ஒரு பாரிய ஹோட்டலுக்குச் செல்லும்போது, அங்கு ஆயுர்வேத சிகிச்சையைப் பெறலாம். இதே திட்டத்தை நாமும் எதிர்காலத்தில் செயல்படுத்த வேண்டும்.

ஆயுர்வேதத்தை மருத்துவ விஞ்ஞானமாக்குவதே எனது நோக்கம்: ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க | President Ranil On Ayurvedic

எனவே, சுற்றுலாத் துறையில் ஆயுர்வேத மருத்துவம் சேர்க்கப்பட வேண்டும். இது அதிக அந்நியச் செலாவணியை ஈட்ட நமக்கு உதவுகிறது. இன்று சென்னை (Chennai) போன்ற நாடுகளில் ஜோதிட முறையும் உருவாகியுள்ளது.

இந்த மரபுகள் அனைத்தையும் இணைத்து இந்தத் துறையை நாம் முன்னேற்ற வேண்டும். எனவே ஆயுர்வேத தேசிய சபையை எவ்வாறு நிறுவுவது என்பது குறித்து எங்களுக்கு ஆலோசனை தேவை.

அனைவரும் ஒன்றிணைந்து செயற்படும் வகையில் இந்த சபையை நிறுவுவது அவசியமாகும்" என்றார்.

மின்சாரம் மற்றும் எரிபொருள் சேவைகள் தொடர்பில் வெளியான அதிவிஷேட வர்த்தமானி

மின்சாரம் மற்றும் எரிபொருள் சேவைகள் தொடர்பில் வெளியான அதிவிஷேட வர்த்தமானி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023