"ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் வாழ்க்கை வரலாறு" - மூன்றாம் பதிப்பு அதிபரிடம் கையளிப்பு
Ranil Wickremesinghe
President of Sri lanka
By Mohankumar
“ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் வாழ்க்கை வரலாறு” என்ற நூலின் மூன்றாவது பதிப்பு அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் நேற்று (07) அதிபர் அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
இந்தப் புத்தகமானது அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் வாழ்க்கை தொடர்பாக சிறிலங்கா முதலீட்டுச் சபையின் தலைவர் தினேஷ் வீரக்கொடியினால் எழுதப்பட்டது.
இந்நூல் முதன்முதலில் 2017 இல் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வெளியிடப்பட்டது.
கலந்து கொண்டோர்
நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்க, அதிபரின் விசேட திட்டப்பணிப்பாளர் தீக்ஷன அபேவர்தன உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டதாக அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்