தொடரும் சீரற்ற காலநிலை: ரணிலின் அதிரடி உத்தரவு
சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் சேதமடைந்த வீதிகளை உடனடியாக புனரமைப்பதற்கு சுமார் மூன்று பில்லியன் ரூபா ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கையானது அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickramasinghe) உத்தரவுக்கு அமைய எடுக்கப்பட்டுள்ளதாக கிராமிய வீதி அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக அதிபர் ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (Sivanesathurai Santhirakanthan) கருத்து தெரிவித்துள்ளார்.
கிராமிய பொருளாதாரம்
இதனடிப்படையில், கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக அதிபர் தலைமையிலான அரசாங்கம் 12 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அந்த ஏற்பாடுகளுடன் கிராமப்புற வீதிகள் மற்றும் பாலங்கள் அமைப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரையில் சுமார் 65 வீதமான பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |