நாட்டு மக்களுக்கு ரணில் விசேட உரை
Ranil Wickremesinghe
Sri Lankan Peoples
President of Sri lanka
By Vanan
இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்காக கடந்த 09 மாதங்களில் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து, அதிபர் ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்ற உள்ளார்.
அனைத்து பொதுமக்களையும் தெளிவுபடுத்துவதற்காக இந்த விசேட உரை நாளை (01) இரவு 8.00 மணிக்கு நாட்டிலுள்ள அனைத்து தொலைக்காட்சி, வானொலி மற்றும் நவீன ஊடகங்களிலும் ஒளி ஒலிபரப்பு செய்யப்பட இருக்கிறது.
செயல்பாட்டு முன்மொழிவுகள்
இதன்மூலம், தேசிய மாற்றத்திற்கான கொள்கைத்திட்டம் தொடர்பில் பொதுமக்களுக்கு தெளிவைப்பெற முடியும் என்பதுடன், எதிர்பார்க்கும் இலக்குகளை அடைவதற்கான செயல்பாட்டு முன்மொழிவுகளும் அதிபரால் முன்வைக்கப்பட உள்ளன.
