சுதந்திரக் கட்சியின் அதிபர் வேட்பாளர் குறித்து துமிந்த திஸாநாயக்க பகிரங்கம்
சிறிலங்காவின் எதிர்வரும் அதிபர் தேர்தலில் சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிடவுள்ள அதிபர் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி இதுவரையில் எந்தத் தீர்மானத்தையும் எடுக்கவில்லை என அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க (Duminda Dissanayake) தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
”ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக மைத்திரிபால சிறிசேனவிடம் (Maithripala Sirisena) சுமார் 400 வழக்குகள் உள்ளன.
பல வழக்குகள் உள்ளவர்
எனவே, இவ்வாறானதொரு தருணத்தில், இவ்வாறான பல வழக்குகள் உள்ளவரின் அழைப்பின் பேரில், நாட்டின் நீதியமைச்சர் நாற்காலியின் மறுபக்கம் வந்து அமர்ந்திருப்பது எந்தளவுக்கு நியாயம் என நாட்டு மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அதேவேளை எதிர்கால அதிபர் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்ற வகையில் நாங்கள் எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை“ என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |