யாழில் வைத்தியசாலைக்கு சென்ற 5 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்
யாழ்பாணத்தில் காய்ச்சல் மற்றும் வாந்தி காரணமாக சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த சிறுமியொருவர் போகும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவமானது, நேற்று(28) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சில தினங்களுக்கு முன்னர் குறித்த சிறுமி உடல் இயலாமை (காய்ச்சல்)காரணமாக அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு சென்று வீடுதிரும்பியுள்ளார்.
அதனை தொடர்ந்து, நேற்றையதினம் உடல் நிலை மோசமாகியமையால் பெற்றோர் சிறுமியை அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு மீண்டும் கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
யாழ்ப்பாணம் - ஆவரங்கால் கிழக்கைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் சஸ்மிதா என்ற 5 வயதான சிறுமியே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுமியின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பாக அச்சுவேலி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |