யாழ். மாவட்ட குரு முதல்வரைச் சந்தித்தார் ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ச
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி சட்டத்தரணியும் ஜனாதிபதி வேட்பாளருமான விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe) யாழ்.மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் (Rev. Fr. P. J. Jebaratnam) அடிகளாரை சந்தித்தார்.
இன்று (07) இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது தற்போதைய தேர்தல் நிலவரம் தொடர்பாக கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை தற்போது சிறிலங்கா பொதுஜன பெரமுன நாமல் ராஜபக்சவை (Namal Rajapaksa) ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ள நிலையில் ஆளும் கட்சியிலுள்ள ரணில் விக்ரமசிங்கவும் (Ranil Wickremesinghe) ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல்
இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தல் குறித்த தனது நிலைப்பாடு தொடர்பாக கருத்து தெரிவித்தார்.
இதன்போது மக்கள் தமக்கு சேவை செய்யக்கூடிய ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்வார்கள் என சுட்டிக்காட்டினார்.
அத்துடன் தொடர்பிலே தான் ஜனாதிபதியானால் தேசிய இனப் பிரச்சினை தொடர்பில் எவ்வாறான தீர்வை வழங்குவேன் எனவும் விஜயதாச இதன்போது குறிப்பிட்டார்.
மேலும் சிறையிலுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் விஜயதாச தனது கருத்துக்களை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |