மரண தண்டனையை நிறைவேற்றும் ஆவணத்தில் கையெழுத்திடுவதில்லை - ரணில் தீர்மானம்
Ranil Wickremesinghe
Sri Lanka
By Kiruththikan
இலங்கையில் எந்தவொரு நீதிமன்றத்தினாலும் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்றும் ஆவணத்தில் கையெழுத்திடுவதில்லை என அதிபர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
அதிபரின் இந்த தீர்மானம் சட்டமா அதிபரினால் உயர் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு, மரணத் தண்டனை நிறைவேற்றுவதற்கான ஆவணத்தில் கையொப்பம் இடுவதற்கு 2019 ஆம் ஆண்டு முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தீர்மானம் எடுத்திருந்தார்.
அடிப்படை உரிமை மீறல் மனு
இந்த தீர்மானத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு இன்று (23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகர் நெரின்புள்ளே மூலம் இந்த விடயம் அறியப்படுத்தப்பட்டுள்ளது.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி