ஜனாதிபதி தேர்தல் திகதி : பின்வாங்கியது ஆணைக்குழு
ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் திகதி
இதன்படி எதிர்வரும் வாரம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் திகதியை நாடு நிச்சயமாக அறிய முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க (R.M.A.L.Ratnayake) தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி தேர்தல் திகதி வெள்ளிக்கிழமை 26 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்கப்படும் என தலைவர் முன்னர் குறிப்பிட்டிருந்தார்.
ஜனாதிபதி தேர்தல் எப்போது நடத்தப்படும் என கொழும்பில் ஊடகவியலாளர்கள் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஜனாதிபதி தேர்தல் திகதி தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளை (26) வெளியிடப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
அதன்படி, வரும் 15ம் திகதி முதல் வேட்புமனுக்கள் ஏற்கப்படும்.
அதன் பின்னர் அரசியலமைப்பின் பிரகாரம் 06 மாதங்களுக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |