2026 இல் மக்களுக்கு சிறந்த வாழ்க்கை தரம் உருவாக்கப்படும் : ரணில் உறுதி
2026 ஆம் ஆண்டாகும் போது மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரம் உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு (Batticaloa) கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை விளையாட்டரங்கில் இன்று (24) முற்பகல் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட 'இயலும் சிறிலங்கா' வெற்றிப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பேரணியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பிக்கப்பட்ட வேலை
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மக்களை வாழ வைப்பது என்பது அடிப்படை உரிமை மீறல் அல்ல எதிர்காலத்திலும் மக்களுக்காக எத்தகைய முடிவையும் எடுக்கத் தயார்.
மக்களுக்கு நிவாரணம் வழங்கி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட வேலைத் திட்டத்தை எதிர்கட்சியினர் தடுத்து நிறுத்த முயற்சித்தனர்.
ஆனால் கடந்த இரண்டு வருடங்களில் மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்க அரசாங்கம் செயற்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டிற்குள் நாட்டின் அனைத்து மக்களுக்கும் சிறந்த வாழ்க்கைத் தரத்தை உருவாக்குவோம்.
பலத்த வரவேற்பு
அதற்காக சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் கைகோர்த்து முன்னோக்கிச் செல்ல வேண்டும்.
எதிர்காலத்திலும் மக்களுக்காக எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கத் தயார்” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதுடன் ஜனாதிபதிக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும், இந்த மேடையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ரோயல் கல்லூரியில் கற்பித்த ஆசிரியர் சிவலிங்கமும் கலந்து கொண்டிருந்தமை விசேட அம்சமாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |