துணைவேந்தரை நியமிக்க ஆளும் தரப்பின் அரசியல் அழுத்தம் அம்பலம்
தற்போது வயம்ப பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் எச்.எம்.ஏ. ஹேரத்தை(Herath) குறித்த பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தராக நியமிக்குமாறு கோரி அமைச்சர்கள் அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு(Gotabaya Rajapaksa) கடிதம் அனுப்பியுள்ளனர்.
அரச தலைவருக்கு இவ்வாறான கடிதங்களை அனுப்பியுள்ள தரப்பினரில் டி.பி ஹேரத்(DB Herath )மற்றும் சனத் நிஷாந்த(Sanath Nishantha )ஆகியோர் இராஜாங்க அமைச்சர்களாகவும் உள்ளனர்.
அத்துடன், ஆளும் கட்சியைச் சேர்ந்த மேலும் இருவர் எச்.எம்.ஏ. ஹேரத்தின் பெயரை முன்மொழிந்து கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், வியத்கம குளியாபிட்டிய கிளையின் தலைவர் சட்டத்தரணி மாயாதுன்னே செனவிரத்ன(Mayadunne Seneviratne) மற்றும் அதன் செயலாளர் சிந்தக டி சில்வா(Chinthaka de Silva) மற்றும் இலங்கை பொது வைத்தியர்கள் சங்கத்தின் அழைப்பாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் தம்மிக்க வீரதிலக(Dhammika Weerathilaka) ஆகியோரும் இது தொடர்பில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.






