பயங்கரவாதத் தடைச் சட்டம் விரைவில் நீக்கம் - பிரதமர் ஹரிணி அதிரடி அறிவிப்பு

Colombo Harini Amarasuriya Sri Lanka Prevention of Terrorism Act NPP Government
By Thulsi Jun 24, 2026 02:44 AM GMT
Report

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குவதற்குரிய சட்ட ஏற்பாடுகள் அனைத்தும் தற்சமயம் நிறைவு பெற்று, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்..

கொழும்பு (Colombo) ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே பிரதமர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “வெறும் அரசமைப்பு மறுசீரமைப்பை மேற்கொள்வதை விடவும், நாட்டுக்கு முற்றிலும் புதிய அரசமைப்பு ஒன்றுக்குச் செல்வதே எமது அரசின் பிரதான எதிர்பார்ப்பாகும்.

ராஜபக்ச குடும்பத்தைப் பழிவாங்குவதே திசைகாட்டியின் நோக்கம்...! மகிந்த குற்றச்சாட்டு

ராஜபக்ச குடும்பத்தைப் பழிவாங்குவதே திசைகாட்டியின் நோக்கம்...! மகிந்த குற்றச்சாட்டு

புதிய அரசமைப்பு 

எமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இந்த வாக்குறுதியை நாம் நாட்டு மக்களுக்குத் தெளிவாக வழங்கியிருந்தோம். புதிய அரசமைப்பு கொண்டுவரப்பட வேண்டும் என்ற கொள்கை ரீதியான விடயத்தில் நாம் இப்போதும் மிகவும் உறுதியாகவே உள்ளோம்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் விரைவில் நீக்கம் - பிரதமர் ஹரிணி அதிரடி அறிவிப்பு | Prevention Of Terrorism Act Will Be Repealed Soon

அது குறித்த ஆரம்பக்கட்டப் பேச்சுகள் மற்றும் உரிய நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

எனினும், அந்த விடயத்துக்குத் தற்போதைய காலகட்டத்தில் முதன்மை முன்னுரிமை வழங்கப்படவில்லை என்பதை நாம் மறைக்காமல் ஏற்கின்றோம்.

ஏனெனில், நாடு தற்சமயம் எதிர்கொண்டுள்ள சவாலான சூழ்நிலையில் பொருளாதாரம், கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் வறுமை ஒழிப்பு ஆகிய அத்தியாவசியத் தேவைகளுக்கே எமது அரசு தற்போது கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது.

திடீர் திருப்பம்: காரில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவர் - யாழ்ப்பாணத்தில் காதலன் மனைவியுடன் கைது

திடீர் திருப்பம்: காரில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவர் - யாழ்ப்பாணத்தில் காதலன் மனைவியுடன் கைது

பயங்கரவாதத் தடைச் சட்டம்

எனினும், பயங்கரவாதத் தடைச் சட்டமானது இந்த வருடத்துக்குள் நிச்சயமாக நீக்கப்படும். அதற்குரிய ஆரம்பக்கட்ட சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் முழுமையாக முடிவடைந்துவிட்டன.

பயங்கரவாதத் தடைச் சட்டம் விரைவில் நீக்கம் - பிரதமர் ஹரிணி அதிரடி அறிவிப்பு | Prevention Of Terrorism Act Will Be Repealed Soon

அது தொடர்பான உத்தியோகபூர்வ யோசனை மிக விரைவில் அமைச்சரவையின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அதேபோன்று, நீண்டகாலமாகக் கோரப்பட்டு வரும் நிறைவேற்று ஜனாதிபதி அதிகார முறைமை ஒழிப்பு என்பது, நாம் கொண்டுவரவுள்ள புதிய அரசமைப்புடன் நேரடியாகத் தொடர்புபட்ட ஒரு விடயமாகும்.

முழுமையான மக்கள் அனுமதியுடன் புதிய அரசமைப்பு இலங்கையில் கொண்டுவரப்படும். எமது அரசின் பதவிக்காலத்தில் இன்னும் மூன்று வருடங்கள் எஞ்சியுள்ளன.

புதிய அரசமைப்பைத் தயாரித்து அமுல்படுத்துவதற்கு இந்தக் காலப்பகுதி முற்றிலும் போதுமானதாகும். இந்த ஆட்சிக் காலத்துக்குப் பிறகும், எமது மக்கள் நலச் சேவைகளைக் கண்டு நாட்டு மக்கள் எமக்கே மீண்டும் தங்களின் பலமிக்க ஆணையை வழங்குவார்கள் என்ற முழுமையான நம்பிக்கை எமக்கு உள்ளது என்றார்.

அதிரடியாக குறையும் மின்கட்டணம்...! மின்சாரசபை கலைப்பு சட்டமூலம்

அதிரடியாக குறையும் மின்கட்டணம்...! மின்சாரசபை கலைப்பு சட்டமூலம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017