இன்று முதல் பாணின் விலை அதிகரிப்பு - கடும் அழுத்தத்தில் மக்கள்

Food Shortages Breadfruit Sri Lanka Food Crisis
By Thulsi Oct 31, 2026 04:45 AM GMT
Report

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 450 கிராம் நிறையுடைய ஒரு பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிப்பு தொடர்பில் வினவிய போதே அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன இவ்வாறு குறிப்பிட்டார். 

அத்துடன், ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளும் 5 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின் தடை - வெளியானது பின்னணி

நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின் தடை - வெளியானது பின்னணி

விலை அதிகரிப்பு சட்டவிரோதமானது

கடந்த 10 நாட்களுக்கு முன்னர் நாட்டிலுள்ள கோதுமை மா விநியோக நிறுவனங்கள் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 13 ரூபாவினால் உயர்த்தின. நாட்டின் வரலாற்று வழக்கத்தின்படி கோதுமை மாவின் விலை அதிகரித்தால் பாணின் விலையும் உடனடியாக உயர்த்தப்பட வேண்டும்.

இன்று முதல் பாணின் விலை அதிகரிப்பு - கடும் அழுத்தத்தில் மக்கள் | Price Of Bread To Increase From Midnight

இருப்பினும், இந்த மா விலை அதிகரிப்பு சட்டவிரோதமானது என்றும், அது குறித்துத் தமக்கு முன்னறிவித்தல் வழங்கப்படவில்லை என்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பதில் பணிப்பாளர் நாயகம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார்.

அத்துடன், வெளிநாடு சென்றிருந்த அமைச்சர் வசந்த சமரசிங்க நாடு திரும்பியதும் மா நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வை எட்டும் வரை பாண் விலையை உயர்த்த வேண்டாம் எனவும் அதிகாரசபை வேண்டுகோள் விடுத்திருந்தது.

அரசாங்கத்தினதும் அதிகாரசபையினதும் இந்த வேண்டுகோளுக்கு மதிப்பளித்து, பேக்கரி உரிமையாளர்களிடமிருந்து கடுமையான அழுத்தங்கள் வந்தபோதிலும், அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் கடந்த 10 நாட்களாக விலையை உயர்த்தாமல் பொறுமையுடன் காத்திருந்தது.

உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி திருட்டு : பயன்பாட்டை முடக்க அதிரடி நடவடிக்கை

உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி திருட்டு : பயன்பாட்டை முடக்க அதிரடி நடவடிக்கை

தீர்வு எதுவும் நிறைவேறவில்லை.  

அமைச்சர் நாடு திரும்பியதும் பேச்சுவார்த்தை மூலம் முறையான தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அத்தகைய தீர்வு எதுவும் நிறைவேறவில்லை.

இன்று முதல் பாணின் விலை அதிகரிப்பு - கடும் அழுத்தத்தில் மக்கள் | Price Of Bread To Increase From Midnight

இந்த நிலையை அடுத்து, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு அவசரமாகக் கூடி இந்த விலை அதிகரிப்புத் தீர்மானத்தை எடுத்தது. இதன்படி, 450 கிராம் எடையுள்ள பாண் ஒன்றின் விலை 5 ரூபாவினாலும், ஏனைய அனைத்து பேக்கரி உற்பத்திகளின் (சிற்றுண்டிகள்) விலைகளும் 5 ரூபாவினாலும் உயர்த்தப்படுகின்றன.

இந்த விலை அதிகரிப்புத் தாமதமானது பேக்கரி உரிமையாளர்களின் தவறினால் ஏற்பட்டது அல்ல என்றும், ஒரு பொறுப்புள்ள சங்கமாக அரசாங்கத்தின் கோரிக்கைக்குச் செவிசாய்த்தமையாலேயே நிகழ்ந்தது. இத்தாமதத்திற்காகப் பேக்கரி உரிமையாளர்களிடம் தமது வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டார்.

திக்திக் நிமிடங்களில் இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் - பிரதமராவாரா நெதன்யாகு..! இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஒரு பாடம்

திக்திக் நிமிடங்களில் இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் - பிரதமராவாரா நெதன்யாகு..! இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஒரு பாடம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023