உயர்ந்து செல்லும் டொலரின் பெறுமதி: அரசுக்கு பாரிய சவால்
இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (04.06.2026) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளில் நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் (04) அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
நாணயமாற்று விகிதங்கள்
இன்று (04) நாட்டின் முன்னணி வர்த்தக வங்கிகள் சிலவற்றில், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 339.50 ரூபாய் முதல் 340.50 ரூபாய் வரையான மதிப்பில் பதிவாகியுள்ளது.

இதேவேளை ஸ்ரேலிங் பவுண் (Pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 441.49 ஆகவும் விற்பனைப் பெறுமதி 457.59 ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய (Canada) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 236.29 ஆகவும் விற்பனைப் பெறுமதி 245.79 ஆகவும் பதிவாகியுள்ளது.
மேலும் யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 381.31 ஆகவும் விற்பனைப் பெறுமதி 396.08 ஆகவும் பதிவாகியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |