அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும்?
இலங்கையில் ரூபாவுடன் ஒப்பிடும் போது டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளதால் நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி 12.5 கிலோ கிராம் எடையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 824 ரூபாவால் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ கிராம் சீனியின் விலை 44 ரூபாவாலும் ஒரு கிலோ கிராம் பருப்பின் விலை 101 ரூபாவாலும் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 45 ரூபாவாலும் அதிகரிக்கப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இறக்குமதி செய்யப்படுகின்ற ஒரு கிலோ கிராம் பால் மா பைக்கட் ஒன்றின் விலையை 300 ரூபாவால் அதிகரிப்பதற்கு பால் மா இறக்குமதியாளர்களின் சங்கம் ஏற்கனவே தயாராகியுள்ளது.
இதற்கமைய, 400 கிராம் எடையுடைய பால் மா பைக்கட் ஒன்றின் விலை 120 ரூபாவால் அதிகரிக்கும் என அந்த சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.