மீண்டும் அதிகரிக்கிறது சிற்றுணவகங்களில் உணவு பொருட்களின் விலை!!
Go Home Gota
Sri Lanka Economic Crisis
Litro Gas Price
Sri Lanka Food Crisis
By Kanna
நேற்று நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு விலை அதிகரிப்புக்கு அமைய, சிற்றுணவகங்களில் விலை அதிகரிப்பை மேற்கொள்வது குறித்த தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு அதன் உரிமையாளர்களுக்கே வழங்குவதாக சிற்றுணவக உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டமையால், தேநீர், பால் தேநீர், உணவுப்பொதி, அப்பம், பராட்டா, கொத்து உட்பட சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனாலும், உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டால், சிற்றுணவக தொழிற்துறை வீழ்ச்சியடையும் எனவும் அவர் தெரிவித்தார்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி