பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளைக் குறைக்க வேண்டும் : கஞ்சன வலியுறுத்தல்
மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கு ஒப்பீட்டளவில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளை குறைக்க வேண்டும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
இதேவேளை பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளை குறைக்குமாறு வர்த்தகர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டுமென அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
அதிபர் ஊடகப் பிரிவில் இன்று (7) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கஞ்சன விஜேசேகர மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மின் கட்டணக் குறைப்பு
கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், உணவக உரிமையாளர்கள் உள்ளிட்ட பொதுச் சேவை வர்த்தகர்கள் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளை உயர்த்துவதற்கு காட்டும் ஆர்வம் விலையைக் குறைப்பதற்கு அல்ல எனவும் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில் மின் கட்டணத்தைக் குறைப்பதன் பலன் கண்டிப்பாக மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.
அத்துடன் மின் கட்டணத்தைக் குறைப்பதற்கு முன் உணவக உரிமையாளர்கள், உணவுப் பொருட்களின் விலையை உயர்த்துவதாக விளம்பரம் செய்வது விலையை குறைக்காத தந்திரம் என்றும், அதன் பிறகு உயர்த்திய தொகையை குறைத்ததாக காட்டுவது அவர்களின் தந்திரம் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |