மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி : இன்று முதல் பாதி விலையில் அத்தியாவசிய பொருட்கள்
தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அரசாங்கத்தால் சலுகை விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய உலருணவுப் பொதிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளது.
இந்த உலருணவு பொதிகளை இன்று (01.04.2025) முதல் 13 ஆம் திகதி வரை பெற்றுக்கொள்ளலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி, 5,000 ரூபா பெறுமதியான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பருவகால உணவு பொதியை 2,500 ரூபாவுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
விலைக்குறைப்பு
இந்த உலருணவுப் பொதிகளை நாடளாவிய ரீதியில் லங்கா சதொச விற்பனை நிலையம் மற்றும் COOPFED விற்பனை நிலையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
இதேவேளை, நேற்று (31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (Ceylon Petroleum Corporation) பெட்ரோலின் விலையைக் குறைத்துள்ளது.
இதன்படி, ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 299 ரூபாவாகும்.
அதேபோல், ஒக்டேன் 95 பெட்ரோல் லீற்றர் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 361 ரூபாவாகும்.
மேலும், ஏனைய எரிபொருட்களின் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
YOU MAY LIKE THIS
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
22 மணி நேரம் முன்