சிற்றுண்டிகளின் விலைகளும் அதிகரிக்கின்றன
Fuel Price In Sri Lanka
Sri Lanka
By Sumithiran
சிற்றுண்டிகளின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக, சிற்றுணவக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பானது அனைத்துப் பொருட்களிலும் தாக்கத்தை செலுத்துகின்றது. எனவே, நூற்றுக்கு 10 சதவீதத்தினால், சிற்றுணவகங்களின் உணவு மற்றும் பானங்களின் விலைகளை அதிகரிக்குமாறு சிற்றுணவக உரிமையாளர்களிடம் கோருவதாக அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
இதனை விடவும் விலையை அதிகரிக்க வேண்டாம். ஏனெனில், வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க வேண்டும் என சிற்றுணவக உரிமையாளர் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நேற்றையதினம் சோற்றுப்பார்சல், கொத்து ரொட்டி மற்றும் பிறைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகள் மட்டுமே அதிகரிக்கப்படுவதாக அசேல சம்பத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கைலாச வாகனம்


திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..! 2 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்