சிஐடி வளையத்தில் சலே...! மாயமான குடும்பத்தின் குரல் - அரங்கேறும் மர்மங்கள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டுகளின் கீழ் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு சிஐடி விசாரணைகள் தொடர்ச்சியாக தீவிரமடைந்துள்ளன.
இந்தநிலையில், ஆரம்பத்தில் அதிகாரிகள் மீது பகிரங்கக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஊடகங்களில் குரல் எழுப்பிய அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியாத அளவிற்கு முற்றிலும் மௌனமாகியுள்ளனர்.
இந்தத் திடீர் அமைதியானது, வழக்கின் போக்கை பாதிக்காமல் இருப்பதற்காக சட்டத்தரணிகளின் ஆலோசனையின் பேரில் எடுக்கப்பட்ட தற்காப்பு தந்திரோபாய நகர்வா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மறுபுறம், விசாரணைகளின் தீவிரத்தைக் குறைக்க அதிகார மட்டங்களுடன் எட்டப்பட்ட மறைமுக உடன்பாடுகளின் விளைவா அல்லது அவர்களின் குரலை ஒடுக்க விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களா என்ற பலத்த சந்தேகங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
இது குறித்து இப்பதிவில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |