“பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022” ஐந்தாவது நாள் சுற்றுப்போட்டிகள் நிறைவு (காணொளி)
பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022 ஐந்தாவது நாள் சுற்றுப்போட்டி இன்று (10) யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம் பெற்றது.
தமிழி அமைப்பின் ஏற்பாட்டிலும், யாழ். மாநகர சபையின் இணை அனுசரனையுடனும், ஐபிசி தமிழின் பிரதான அனுசரணையுடனும், யாழ். மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் அனுமதியுடனும் நடத்தப்படுகின்றது.
கடந்த மாதம் சனிக்கிழமை (27.08.2022) ஆரம்பமாகிய குறித்த சுற்றுப்போட்டி எதிர்வரும் ஒக்டோபர் 1ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இன்றைய போட்டிகள்
யாழ். பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022 துடுப்பாட்ட சுற்றுப்போட்டியில் இன்று மூன்று போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், முதலாவது போட்டியில் சுழிபுரம் றைனோஸ் மற்றும் கிரிக்கெட் நைட்ஸ் ஆகிய அணிகளும், இரண்டாவது போட்டியில் அரியாலை கில்லாடிகள் 100 மற்றும் ஐப்னா றோயல்ஸ் ஆகிய அணிகளும், மூன்றாவது போட்டியில் சுழிபுரம் கிறீன் ராகன்ஸ் மற்றும் றைசிங் ஸ்டார் ஆகிய அணிகளும் மோதிக் கொள்கின்றன.
போட்டி - 1 முடிவுகள்
இன்று முதல் போட்டியில் சுழிபுரம் றைனோஸ் மற்றும் கிரிக்கெட் நைட்ஸ் ஆகிய அணிகள் மோதிக் கொண்டன.
இந்தப் போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சுழிபுரம் றைனோஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய கிரிக்கெட் நைட்ஸ் அணி 20 பந்துப் பரிமாற்றங்களில் 7விக்கட்களை இழந்து 181 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சுழிபுரம் றைனோஸ் அணி18 ஆவது பந்துப் பரிமாற்றத்தின் நிறைவில் 7 விக்கட்களை இழந்து 184 ஓட்டங்களை பெற்று, 3 விக்கட்களால் வெற்றியை பெற்றுக்கொண்டது.
போட்டி - 2 முடிவுகள்
இரண்டாவது போட்டியில் அரியாலை கில்லாடிகள் 100 மற்றும் ஐப்னா றோயல்ஸ் ஆகிய அணிகள் மோதின.
இந்தப் போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அரியாலை கில்லாடிகள் 100 அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஐப்னா றோயல்ஸ் அணி 20 பந்துப் பரிமாற்றங்களில் 8 விக்கட்களை இழந்து 188 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அரியாலை கில்லாடிகள் 100 அணி 14 பந்து பரிமாற்றங்களில் சகல விக்கட்களையும் இழந்து 97 ஓட்டங்களுக்குள் சுருண்டது.
இதன் மூலம் ஐப்னா றோயல்ஸ் 91 ஓட்டங்களால் வெற்றியை தனதாக்கியது.
போட்டி - 3 முடிவுகள்
மூன்றாவது போட்டி சுழிபுரம் கிறீன் ராகன்ஸ் மற்றும் றைசிங் ஸ்டார் ஆகிய அணிகளுக்கிடையில் இடம்பெற்றது.
இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற றைசிங் ஸ்டார் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சுழிபுரம் கிறீன் ராகன்ஸ் அணி 18.2 ஆவது பந்துப் பரிமாற்றத்தில் சகல விக்கட்களையும் இழந்து 111 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றைசிங் ஸ்டார் அணி 16 ஆவது பந்து பரிமாற்றத்தின் இறுதிப் பந்தில் 114 ஓட்டங்களைப் பெற்று 6 விக்கட்களால் வெற்றியை தனதாக்கியது.
