“யாழ் பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022” துடுப்பாட்ட சுற்றுப்போட்டி - இன்றைய போட்டிகள் நிறைவு (காணொளி)

Jaffna Hindu College IBC Tamil Jaffna Cricket
By Kiruththikan Aug 27, 2022 12:31 PM GMT
Report

பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022 இன்று (27) யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

தமிழி அமைப்பின் ஏற்பாட்டிலும், யாழ். மாநகர சபையின் இணை அனுசரனையுடனும், ஐபிசி தமிழின் பிரதான அனுசரணையுடனும், யாழ். மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் அனுமதியுடனும் பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022 நடத்தப்படுகின்றது.

இந்தச் சுற்றுப்போட்டியில்180 க்கு மேற்பட்ட வீரர்களுடன் 12 அணிகள் பங்குபற்றுகின்றன.

இந்த சுற்றுப் போட்டியானது தொழில்முறையானதாக அமைவதுடன் யாழ். மாவட்ட துடுப்பாட்ட வீரர்களை பொருளாதார ரீதியில் ஊக்குவிப்பதற்கும் முயற்சிக்கின்றது.

இதற்கமைய இந்தப் போட்டிகள் இன்று ஆரம்பமாகி செப்டம்பர் மாதம் வரையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

போட்டி - 1

“யாழ் பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022” துடுப்பாட்ட சுற்றுப்போட்டியின் (இருபதுக்கு - இருபது) முதல் போட்டியில் சுழிபுரம் கிறீன் ராகன்ஸ் அணியும் அரியாலை கில்லாடிகள் 100 அணியும் மோதிக் கொண்டன.

இப்போட்டியின், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அரியாலை கில்லாடிகள் 100 அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சுழிபுரம் கிறீன் ராகன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துப் பரிமாற்றங்களின் நிறைவில் 9 விக்கட்கள் இழப்பிற்கு 163 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அரியாலை கில்லாடிகள் 100 அணி 19 ஆவது பந்துப் பரிமாற்றத்தின் நிறைவில் சகல விக்கட்களையும் இழந்து 132 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இதன் மூலம் சுழிபுரம் கிறீன் ராகன்ஸ் அணி 31 ஓட்டங்களால் வெற்றியை தனதாக்கியது. போட்டியின் ஆட்டநாயகனாக சுழிபுரம் கிறீன் ராகன்ஸ் அணியின் பந்து வீச்சாளர் ஜி.லிங்கநாதன் தெரிவானார்.  

போட்டி - 2

தொடர்ந்து இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் சுழிபுரம் றைனோஸ் அணியும் றைசிங் ஸ்ரார்ஸ் அணியும் மோதிக்கொண்டன.

இப்போட்டியின், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சுழிபுரம் றைனோஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய றைசிங் ஸ்ரார்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துப் பரிமாற்றங்களின் நிறைவில் 4 விக்கட்கள் இழப்பிற்கு 219 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சுழிபுரம் றைனோஸ் அணி 17. 2 ஆவது பந்துப் பரிமாற்றத்தில் 9 விக்கட் இழப்பிற்கு 132 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இதன் மூலம் றைசிங் ஸ்ரார்ஸ் அணி 67 ஓட்டங்களால் வெற்றியை தனதாக்கியது.

போட்டியின் ஆட்டநாயகனாக றைசிங் ஸ்ரார்ஸ் அணியில் துடுப்பாட்டித்தில் 43 பந்துகளுக்கு 64 ஓட்டங்களை விளாசிய ஏ. ஜன்சன் தெரிவானார்.

போட்டி - 3

தொடர்ந்து இடம்பெற்ற மூன்றாவது போட்டியில் கிரிக்கெட் நைட்ஸ் அணியும் ஜப்னா றோயல்ஸ் அணியும் மோதிக்கொண்டன.

இப்போட்டியின், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கிரிக்கெட் நைட்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி, கிரிக்கெட் நைட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துப் பரிமாற்றங்களின் நிறைவில் 9 விக்கட்களை இழந்து 125 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜப்னா றோயல்ஸ் அணி 19. 3 ஆவது பந்துப் பரிமாற்றத்தில் சகல விக்கட்களையும் இழந்து 118 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இதன் மூலம் கிரிக்கெட் நைட்ஸ் அணி 07 ஓட்டங்களால் வெற்றியை தனதாக்கியது.

போட்டியின் ஆட்டநாயகனாக கிரிக்கெட் நைட்ஸ் அணியில் சகல துறையில் கலக்கிய எஸ். அஜித் தெரிவானார்.

“யாழ் பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022” துடுப்பாட்ட சுற்றுப்போட்டியின் மேலும் 3 போட்டிகள் நாளைய தினம்(28) யாழ். இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


பங்கு பெறும் அணிகள்  

“யாழ் பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022” துடுப்பாட்ட சுற்றுப்போட்டி - இன்றைய போட்டிகள் நிறைவு (காணொளி) | Priders Premier League Thamizhi Jaffna

  • வேலனை வேங்கைகள்
  • சுழிபுரம் றைனோஸ்
  • ஜப்னா றோயல்ஸ்
  • ஜப்னா பன்தேர்ஸ்
  • ஜப்னா சலன்ஜேர்ஸ்
  • யாழ் சீட்டாஸ்
  • சுழிபுரம் கிறீன் ராகன்ஸ்
  • சுண்டிக்குளி ஈகிள்ஸ்
  • அரியாலை கில்லாடிகள் 100
  • கிரிகெட் நைட்ஸ்
  • கொக்குவில் ஸ்ரார்ஸ்
  • றைசிங் ஸ்ரார்ஸ்

குறித்த 12 அணிகளை சேர்ந்த 180க்கும் மேற்பட்ட வீரர்களை உள்ளடக்கி பிறைடர்ஸ் பிரீமியர் லீக் (PPL) 2022 துடுப்பாட்ட சுற்றுப்போட்டி இடம்பெறுகின்றது.

சுற்றுப்போட்டியின் பரிசுத்தொகை விபரம்,

  • வெற்றியாளர் : 1000000.00/=
  • இரண்டாம் இடம் : 500000.00/=
  • மூன்றாம் இடம்: 200000.00/=
  • நான்காவது இடம்: 100000.00/=


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026