யாழ் பிறைட்ஸ் பிறிமியர் லீக் 2022 துடுப்பாட்ட சுற்றுப்போட்டி
துடுப்பாட்ட சுற்றுப்போட்டி
தமிழி அமைப்பின் பிறைட்ஸ் பிறிமியர் லீக் (PPL) 2022 துடுப்பாட்ட சுற்றுப்போட்டி இடம் பெறவுள்ளது.
தமிழி அமைப்பின் ஏற்பாட்டில் யாழ் மாநகர சபையின் இணை அனுசரணையுடன், ஐபிசி தமிழின் பிரதான அனுசரணையுடனும் ஓகஸ்ட் மாத இறுதிப் பகுதியில் இருந்து செப்டம்பர் மாதம் வரை இடம் பெறவுள்ளது.
12 அணிகளையும் 180 வீரர்களையும் உள்ளடக்கி பிறைட்ஸ் பிறிமியர் லீக் (PPL) 2022 துடுப்பாட்ட சுற்றுப்போட்டி இடம் பெறவுள்ளது.
குறித்த சுற்றுத்தொடரில் வெற்றியீட்டிய அணிக்கு ரூபா 1000000.00ம், இரண்டாம் இடத்தை பெற்ற அணிக்கு ரூபா 500000.00ம், மூன்றாம் இடத்தை தக்கவைத்துக் கொண்ட அணிக்கு ரூபா 200000.00ம், நான்காம் இடத்தை பெற்றுக்கொண்ட அணிக்கு ரூபா 100000.00ம் பரிசுத்தொகையாக வழங்கப்படவுள்ளது.
பிறைட்ஸ் பிறிமியர் லீக் (PPL) 2022 துடுப்பாட்ட சுற்றுப்போட்டியில் பங்கு பெறும் அணிகள்
- வேலனை வேங்கைகள்
- சுழிபுரம் றைனோஸ்
- ஜப்னா றோயல்ஸ்
- ஜப்னா பன்தேர்ஸ்
- ஜப்னா சலன்ஜேர்ஸ்
- யாழ் சீட்டாஸ்
- சுழிபுரம் கிறீன் ராகன்ஸ்
- சுண்டிக்குளி ஈகிள்ஸ்
- அரியாலை கில்லாடிகள்
- 100 கிரிகெட் நைட்ஸ்
- கொக்குவில் ஸ்ரார்ஸ்
- றைசிங் ஸ்ரார்ஸ்
குறித்த 12 அணிகளை சேர்ந்த 180க்கும் மேற்பட்ட வீரர்களை உள்ளடக்கி பிறைட்ஸ் பிறிமியர் லீக் (PPL) 2022 துடுப்பாட்ட சுற்றுப்போட்டி இடம்பெறவுள்ளது.
யாழ் மாவட்ட துடுப்பாட்ட வீரர்களை பொருளாதார ரீதியில் ஊக்குவிப்பதை கருத்தில் கொண்டு தமிழி அமைப்பால் குறித்த துடுப்பாட்ட சுற்றுப்போட்டி நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.