போதி மரத்தினை பாதுகாக்கும் நிகழ்வில் சிறு வயது வாழ்க்கையினை நினைவுபடுத்தி பிரதமர்

Mahinda Sri Lanka Podujana Peramuna
By Vasanth Feb 13, 2021 03:25 PM GMT
Report

இலங்கை புத்த சாசனத்தின் சிறந்த ஆன்மீக வளமாக விளங்கும் இந்த போதி மரத்தின் புதிதாக வெளிவந்த தளிர்கள் மற்றும் வேர்களின் படிப்படியான வளர்ச்சிக்கு போதுமான இடத்தை அனுமதிக்க பாதுகாப்பு சுவரை விரிவுபடுத்த வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். வரலாற்று சிறப்புமிக்க பெல்லன்வில போதி மரத்தை பாதுகாக்கும் புண்ணிய நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தலைமையில் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது. நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தேவநம்பியதிஸ்ஸ மன்னனின் காலத்திலிருந்து பக்தர்களால் வழிபடப்படும் பெல்லன்வில ரஜமஹா விகாரையில் காணப்படும் போதி மரம், அனுராதபுரத்தில் உள்ள ஜயஸ்ரீ மகா போதி மரத்திலிருந்து தோன்றிய போதி மரம் என்பதை நாம் அறிவோம். இலங்கை புத்த சாசனத்தின் சிறந்த ஆன்மீக வளமாக விளங்கும் இந்த போதி மரத்தின் புதிதாக வெளிவந்த தளிர்கள் மற்றும் வேர்களின் படிப்படியான வளர்ச்சிக்கு போதுமான இடத்தை அனுமதிக்க பாதுகாப்பு சுவரை விரிவுபடுத்த வேண்டும். அதற்கு உகந்த வகையில் பண்டைய போதி சுவர்கள் மற்றும் போதி மரங்களின் பாதுகாப்பு குறித்து நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் விரிவாக்கம் மற்றும் கட்டுமானம் செய்யப்படுவது அவசியம். அதன் மூலம் போதி மரத்தை நீண்ட காலத்திற்கு பாதுகாக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

சிறு வயதிலிருந்தே ஒரு பரீட்சை நெருங்கும்போது எமக்கு பெல்லன்வில ரஜமஹா விகாரையே நினைவிற்குவரும். இது நாம் அனைவரும் பழகிய ஒரு கொள்கை என்று நினைக்கிறேன். ஏனென்றால், ஒரு பரீட்சை நெருங்கும் போது, நாம் அனைவரும் எங்கிருந்தாலும் பெல்லன்விலவிற்கு வருகிறோம். பெல்லன்விலவிற்கு வருகைதந்து போதி மர வழிபாட்டில் ஈடுபட்டதை தொடர்ந்தே நாம் பரீட்சைக்கு செல்வோம். அவ்வாறானதொரு தொடர்பு நமக்கு இந்த பெல்லன்வில விகாரையுடன் காணப்படுகிறது எனத் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் மஹாசங்கத்தினர் மற்றும் அமைச்சர்களான காமினி லொகுகே, உதய கம்மன்பில, இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜேதாஸ ராஜபக்க்ஷ, ஜகத் குமார, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்