பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலக வேண்டும்! இஸ்ரேலியர்கள் போர்க்கொடி
ஹமாஸ் அமைப்பிடம் அகப்பட்ட பணயக்கைதிகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்காததற்காக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலக வேண்டும் என்று இஸ்ரேலியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்று சனிக்கிழமை ஹமாஸ் அமைப்பால் கடத்தப்பட்ட பணயக்கைதிகள் சிலரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதை இஸ்ரேலிய இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பணயக்கைதி ஒப்பந்தம்
இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்திற்கு வெளியே மக்கள் திரண்டு தமது எதிரப்பை வெளியிட்டு வருகின்றனர்.
இந்தச் செய்தி நெதன்யாகு பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக தூண்டியுள்ளது
கடத்தப்பட்டவர்களின் குடும்பங்கள் இஸ்ரேலிய அரசாங்கம் ஹமாஸுடனான பணயக்கைதி ஒப்பந்தத்தை மேற்கொள்ளவேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, இந்த வார தொடக்கத்தில் ஜெருசலேம் போஸ்ட் வெளியிட்ட கருத்துக் கணிப்பில், 86 சதவீத இஸ்ரேலியர்கள் இந்தத் தாக்குதல் அவரது அரசாங்கத்தின் தோல்வி என்று நம்புவதாகவும், 56 சதவீதம் பேர் அவர் பதவி விலக வேண்டும் என்றும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.