ஒரே பிள்ளையை கொன்று தவறான முடிவெடுத்த பிரதமர் பாதுகாவலர்
Sri Lanka Police
Sri Lankan Peoples
By Dilakshan
மனநலம் பாதிக்கப்பட்ட ஒன்பது வயது மகனைக் கொன்ற காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
பிரதமரின் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக மஹாபாகே காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், உயிரிழந்தவர் வெலிசரை, வெந்தேசி தோட்டத்தில் வசித்து வந்தவர் ஒருவர் ஆவார்.
மேலதிக விசாரணை
குறித்த நபர் நோய் காரணமாக தனது ஒரே பிள்ளை மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும் என்ற மன உளைச்சலில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில், மஹாபாகே காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்