பிரதமர் பதவி விலகக் கூடாது - பொதுஜன பெரமுன அழுத்தம்
புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவையுடன் கூடிய இடைக்கால அரசாங்கத்தை அமைக்க அரச தலைவர் இணக்கம் வெளியிட்டுள்ள நிலையில், பிரதமர் மகிந் ராஜபக்சவை பதவியில் இருந்து விலக வேண்டாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிவருகிறது.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மாத்திரமல்லது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மகிந்த ராஜபக்சவின் பெயரை பயன்படுத்தியே வெற்றி பெற்றதாகவும் இதனால், பிரதமர் பதவி விலகும் வேண்டிய அவசியமில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பிரதமர் மகிந்த ராஜபக்ச அண்மையில் அலரி மாளிகையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் உரையாற்றும் போது, தான் பிரதமர் பதவியில் இருந்து விலக போவதில்லை எனக் கூறியிருந்தார்.
எனினும் எவராவது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபித்தால், பதவி விலக தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
