மாணவர் அனுமதிக்கு இலஞ்சம் - சிக்கினார் பாடசாலை அதிபர்
arrest
school
principal
By Sumithiran
கம்பஹாவில் உள்ள அரச பாடசாலை ஒன்றின் அதிபரை, பிள்ளையொன்றை பாடசாலையில் அனுமதிப்பதற்கு இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு கைது செய்துள்ளது.
பாடசாலையின் தரம் 07 இல் மாணவரொருவரை அனுமதிப்பதற்கு அதிபர் 200,000 ரூபா இலஞ்சம் கோரியதாக மாணவரின் பாதுகாவலர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதன்படி, இலஞ்சம் பெறும் வேளையில் அதிபர் அலுவலகத்தில் வைத்து அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான அதிபர் கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பில் இலஞ்சம் , ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி