மாணவர்களைக் கொடுமைப்படுத்திய அதிபர் : கல்வி அமைச்சு முன்னெடுத்த அதிரடி நடவடிக்கை!
Ministry of Education
Colombo
A D Susil Premajayantha
Education
By Kathirpriya
பாடசாலை மாணவர்களை பொலித்தீன் மற்றும் பத்திரிகைகளை உண்ணுமாறு வற்புறுத்திய அதிபர் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நாவலப்பிட்டி, ரம்புக்பிட்டிய மகா வித்தியாலயத்தின் அதிபரே மாணவர்கள் சிலரை பொலித்தீன் மற்றும் பத்திரிகைகளை உண்ணுமாறு வற்புறுத்தியுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்
குறித்த குற்றச்சாட்டு கிடைத்ததை அடுத்து உடனடியான நடைமுறைக்கு வரும் வகையில் இந்த அதிபர் கம்பளை வலயக்கல்வி அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பஸ்பாகே வலயக் கல்விப் பணிப்பாளரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இடம்பெற்று வருகின்ற விசாரணைகளுக்கு வசதியாகவே அதிபரிற்கு இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி