காலி சிறைச்சாலையில் உயிரிழக்கும் கைதிகள் - காரணம் வெளியானது
Galle
Prisons in Sri Lanka
By Vanan
பக்டீரியா(Bacteria) தொற்றுக் காரணமாகவே காலி சிறைச்சாலையில் இரு கைதிகள் உயிரிழந்ததாக மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
காலி சிறைச்சாலையில் நேற்றைய தினம் இரு கைதிகள் உயிரிழந்திருந்ததுடன், 7 கைதிகள் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நோய் அறிகுறி

இந்த நிலையில், இவர்கள் இருவரின் உயிரிழப்புக்கும் பக்டீரியா(Bacteria) தொற்றே காரணம் என தெரியவந்துள்ளது.
நோய் அறிகுறிகளுடன் மேலும் 7 கைதிகள் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக அறிக்கையைப் பெறவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
காலி சிறைச்சாலையில் தற்போது 1,023 கைதிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்