தனியார் நிறுவனத்தில் பல மில்லியன் ரூபா மோசடி: இளம்பெண் கைது
தனியார் நிறுவனமொன்றில் இருந்து 4.5 மில்லியன் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண் காசாளர் ஒருவர் களுத்துறை விசேட மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் பயாகல, ஹல்கந்தவில, துவகொட பிரதேசத்தை சேர்ந்த 19 வயதான பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரிவிக்கையில் குறித்த பெண் பேருவளை, அம்பேபிட்டியகம பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் காசாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.
விசாரணையில் வெளியான தகவல்
இந்நிலையில், அவர் குறித்த வங்கியில் இருந்து 4.5 மில்லியன் ரூபாவை மோசடி செய்தமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து வங்கியின் உரிமையாளர் ஒருவர் காவல்நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
மேலும், காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின் போது 2023.06.09 முதல் 2024.02.06 வரை இந்த மோசடி இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |