முடங்கும் நிலையில் சேவை!! தனியார் பேருந்து சங்கத்தின் அறிவிப்பு
Sri Lankan Peoples
Sri Lanka Fuel Crisis
By Kanna
நிச்சயமற்ற தன்மை
நாளைய தினம் பேருந்து சேவை இடம்பெறுவதில் நிச்சயமற்ற தன்மை நிலவுவதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
டீசல் தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியாக இன்று மூன்றில் ஒரு பங்கு பேருந்துகளே சேவையில் ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடளாவிய ரீதியாகவுள்ள அனைத்து பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்று ஆரம்பமாகின.
அசௌகரியங்களிற்கு முகங்கொடுத்த மாணவர்கள்
மட்டுப்படுத்தப்பட்ட பேருந்து சேவை காரணமாக கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களிலும் பாடசாலை மாணவர்கள், அரச மற்றும் தனியார் பிரிவு சேவையாளர்கள் இன்று அசௌகரியத்திற்கு முகங்கொடுத்தனர்.
இந்தநிலையில், டீசல் தட்டுப்பாட்டுக்கு உடனடி தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன கோரியுள்ளார்.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி