நாளை முதல் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடாது- கெமுனு விஜேரத்ன
strike
private bus
Gemunu Wijeratne
By Thavathevan
இலங்கையில் நாளை தொடக்கம் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன (Gemunu Wijeratne) தெரிவித்துள்ளார்.
டீசல் விலை அதிகரிப்புக்கு நிகராக பேருந்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்படாவிடின் அல்லது டீசலுக்கு மானியம் வழங்கப்படாவிட்டால் நாளை தொடக்கம் பேருந்துகள் சேவையில் ஈடுபடாது.
அத்துடன் டீசல் லீற்றர் ஒன்றிற்கு 55 ரூபா அதிகரிப்பானது 45 சதவீத அதிகரிப்பாகும். பேருந்துக் கட்டணக் கொள்கையின் பிரகாரம் கட்டணத்தில் 15 வீத அதிகரிப்பு தவிர்க்க முடியாதது.
கட்டணம் அதிகரிக்கப்படும் வரை பேருந்துகள் சேவையில் ஈடுபட முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
