பயணக்கட்டுப்பாடு தளர்வின் பின்னர் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடும்
passenger
private bus
gemunu wijeratne
By Sumithiran
எதிர்வரும் 21 ஆம் திகதி திங்கட்கிழமை பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் சேவையில் ஈடுபடும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களின்படி, பேருந்து உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் பேருந்துகளில் பயணிகளை அழைத்துச் செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதோடு, பஸ் கட்டண உயர்வு குறித்து போக்குவரத்து அமைச்சகம் உள்ளிட்ட தொடர்புடைய நிறுவனங்களுடன் கலந்துரையாடப்படும் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி