பிரியந்த குமாரவின் இறுதிப் பயணம் இன்று!!
பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் இறுதிக்கிரியைகள் இன்று(08) இடம்பெறவுள்ளது.
கனேமுல்ல - பொல்ஹேன பொது மயானத்தில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளதாக அவரது உறவினர்கள் அறிவித்துள்ளனர்.
சர்வதேச அரங்கில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய இவரது மரணம் குறித்து, 130 இற்கும் அதிகமானோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதுடன், 26 பேர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பிரியந்த குமாரவின் உடல் எச்சங்கள் நேற்று முன்தினம் (06) மாலை நாட்டை வந்தடைந்தது. உடல் எச்சங்கள் மீதான பிரேத பரிசோதனைகள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் நடத்தப்பட்டதுடன், சடலம் சீல் செய்யப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கையளிக்கப்பட்ட உடல், பிரியந்த குமார தியவடனவின் வீட்டில் மக்கள் அஞ்சலிக்காக நேற்று அதிகாலை 3 மணி முதல் வைக்கப்பட்டுள்ளதுடன், இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளன.