பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த தொடர்பில் பஞ்சாப் மாநில அதிகாரிகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கை!..
Murder
Pakistan
SriLanka
Priyantha Kumara
Muhammad Basharat Raja
By Chanakyan
பாகிஸ்தான் - சியல்கொட்டில் இலங்கையரான பிரியந்த குமார தியவதன படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து உடனடி சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பஞ்சாப் மாநில அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இச்சம்பவம் குறித்து 14 நாட்களுக்குள் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பஞ்சாப் மாநில சட்டம் மற்றும் ஒழுங்குகள் தொடர்பான குழு, காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதையடுத்து, அதனை நாளாந்தம் விசாரணைக்கு உட்படுத்த பஞ்சாப் மாநில நீதியமைச்சர் முஹம்மட் பஷராட் ராஜா (Muhammad Basharat Raja) அறிவுறுத்தியுள்ளாரென பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்