க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு
க.பொ.த. உயர்தர பரீட்சைகளுக்கான (2021 ஆம் ஆண்டுக்கான) செயன்முறைப்பரீட்சைகள் எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பமாகி ஏப்ரல் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ.தர்மசேன (LMD Dharmasena) தெரிவித்துள்ளார்.
தேசிய மற்றும் இந்திய நடனக்கலை, கிழத்தேய கர்நாடக மற்றும் மேற்கத்தேய சங்கீத பரீட்சைகளே குறித்த காலப்பகுதிகளில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையங்களில் இந்த செயன்முறை பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.
செயன்முறை பரீட்சைகளுக்கான அனுமதி அட்டைகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளது.
பரீட்சார்த்திகளிடம் அனுமதி அட்டை இல்லாதிருந்தால், பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
இது தவிர ஏதேனும் பிரச்சினைகள் காணப்படுமாயின் 011-2784208 என்ற இலக்கத்திற்கும் 1911 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கும் அழைத்து தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
நடைமுறைப் பரீட்சைகளுக்கு தோற்றுவதற்குத் தயாராகும் மாணவர்கள் கொரோனாதொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தால் பரீட்சை திணைக்களத்திற்கு அறிவிக்குமாறும், சம்பந்தப்பட்ட மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு வேறொரு திகதியை வழங்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
