கொதித்தெழுந்த இலங்கை! வரலாறு காணாத போராட்டங்கள் முன்னெடுப்பு
நாட்டில் தற்போது நிலவி வரும் நெருக்கடி நிலைமைகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு காரணமான அரச தலைவரையும் அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு கோரி நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இன்று 20வது நாளாக கொழும்பு காலி முகத்திடலில் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன் ஒரு பகுதியாக இன்று (28) நாடு தழுவிய அளவில் 1000க்கும் மேற்பட்ட தொழில் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் நாட்டின் முக்கிய பகுதிகள் பல ஸ்தம்பித்து காணப்படுகின்றன.
அத்தோடு நாடளாவிய ரீதியில் இன்றும் பல இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக யாழ்ப்பாணம், வவுனியா, புத்தளம், மட்டக்களப்பு ,கொட்டக்கலை மற்றும் அம்பாறை ஆகிய இடங்களில் பாரிய அளவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது ,
யாழ்ப்பாணம்
வவுனியா
மட்டக்களப்பு
கொட்டக்கலை
திம்புள்ள
