குரங்கம்மை நோய் குறித்து சுகாதார அமைச்சின் முக்கிய அறிவிப்பு
இலங்கையில் குரங்கம்மை (Monkeypox) நோய்த்தொற்று பரவலை கண்டறிய விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் பாலித மஹிபால (Palitha Mahipala) தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ளடங்கக்கூடிய வகையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு நோயாளிகள் பதிவானால் அவர்களுக்கு கொழும்பு தொற்று நோய் ஆய்வுப் பிரிவில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நோய் அறிகுறிகள்
நோய்த் தொற்றுக்குள்ளானவரின் காயத்தை தொடுவதன் மூலமோ நீண்ட காலமாக நோய்த் தொற்றாளர் சுவாசிக்கும் காற்றை சுவாசிக்க நேரிட்டாலோ இந்த நோய்த் தொற்று பரவக்கூடிய சாத்தியம் உண்டு எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே இந்த நோய்த் தொற்று வேகமாக பரவக்கூடிய அபாயம் கிடையாது எனவும், தொற்று நோயாளியின் படுக்கை விரிப்பு மற்றும் ஆடைகள் ஊடாகவே இந்த நோய்த் தொற்று பரவக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை குரங்கம்மை பாதித்த நோயாளிகளிடம் காய்ச்சல், தோலில் கொப்புளங்கள் உள்ளிட்ட நோய் அறிகுறிகளை காண முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |