அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு சிறிலங்கா விமானப்படை விதித்துள்ள உத்தரவு!
நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு உலங்குவானூர்தி அல்லது விமானங்களை வழங்குவதை நிறுத்தியுள்ளதாக சிறிலங்கா விமானப்படை ஊடகப் பேச்சாளர் துஷான் விஜேசிங்க (Dushan Wijesinghe) தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் விசேட அனுமதியின்றி உலங்குவானூர்தி அல்லது விமானங்களை வழங்கப்படாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
எரிபொருள் பிரச்சினை உள்ளிட்ட பல காரணிகளை அடிப்படையாக கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் பிரதமர் மற்றும் வெளிநாட்டு அரச தலைவர்களின் பயணங்களின் போது உலங்குவானூர்திகள் அல்லது விமானங்களை வழங்கப்படும்.
முன்னர் சிறிலங்கா விமானப்படையால் அமைச்சர்கள் மற்றும் இராஜங்க அமைச்சர்களுக்கு உலங்குவானூர்தி அல்லது விமானங்கள் வழங்கப்பட்டன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முன்னாள் அமைச்சர்கள் பலர் தமது விமானப் பயணத்திற்காக சிறிலங்கா விமானப்படைக்கு செலுத்த வேண்டிய ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் இதுவரை செலுத்தவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 12 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்