வடக்கு கிழக்கில் பெருகும் மதுபான நிலையங்கள்: வலுக்கும் எதிர்ப்புகள்

Tamils Jaffna Northern Provincial Council
By pavan Dec 11, 2023 10:51 AM GMT
Report

வடக்கு கிழக்கில் சுற்றுலா என்ற போர்வையில் மதுபான விற்பனை நிலையங்களை அரசாங்கம் ஊக்குவிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் - உடுப்பிட்டி பகுதியில் மக்களின் எதிர்ப்பை மீறி மீளவும் மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்பட்டதற்கு எதிராக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே ச.சுகிர்தன் இதனை தெரிவித்தார்

மேலும் தெரிவிக்கையில், உடுப்பிட்டியில் மக்கள் செறிவுள்ள பகுதியில் சில மாதங்களுக்கு முன் மதுபான விற்பனை நிலையம் அமைக்கப்பட்டது.

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் தீ விபத்து

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் தீ விபத்து

பொதுமக்களின் எதிர்ப்பு

இதற்கு எதிராக மக்கள் பெருமளவில் போராட்டம் செய்தபோது பொதுமக்களின் எதிர்ப்பை கருத்திற்கொண்டு மதுபான விற்பனை நிலையத்தின் அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு மூடப்பட்டது.

ஆனால் தற்போது சில நாட்களாக மதுபான விற்பனை நிலையம் திறந்து வியாபாரத்தில் ஈடுபடுகிறது. உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி, உடுப்பிட்டி மகளிர் கல்லூரி இமையாணன் இ.த.க பாடசாலை, நவிண்டில் தாமோதரா பாடசாலை என்பன குறித்த மதுபானசாலைக்கு மிகக் குறைந்த தூரத்திலிருக்கிறது.

வடக்கு கிழக்கில் பெருகும் மதுபான நிலையங்கள்: வலுக்கும் எதிர்ப்புகள் | Proliferation Of Bars In North East

இதுதொடர்பாக கரவெட்டி பிரதேச செயலாளரை பொது அமைப்புகள் தொடர்பு கொண்டபோது நேரடியாகவும் வாய் மொழி மூலமாகவும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் தனக்கு அறிவுறுத்தியதனால் தான் இடத்திற்கான சிபார்சினை வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில் சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரை சந்தித்து கலந்துரையாடி மகஜரை கையளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆறு வருடங்களுக்கு முன்னரும் மதுபான விற்பனை நிலையம் அமைக்கப்பட்டு பல சமூக சீரழிவுகள் ஏற்பட்டதால் பொது மக்கள் போராட்டம் செய்து மதுபான விற்பனை நிலையம் அகற்றப்பட்டது.

பாடசாலைகளில் ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் திட்டம்

பாடசாலைகளில் ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் திட்டம்

சுற்றுலா மைய அபிவிருத்தி

இரண்டாம் தடவையாக கொண்டுவர முயற்சித்தும் அது முடியாத நிலையில் மூன்றாவது தடவையாக திறக்கப்பட்ட மதுபான நிலையம் பொதுமக்கள் எதிர்ப்பினால் மூடப்பட்ட போது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் அதில் தலையிட்டு அதை திறந்து வைக்க உத்தரவிட்டார். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரது சந்திப்பில் சாதகமான முடிவு கிடைக்குமென பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கருதுகின்றனர்.

வடக்கு கிழக்கில் பெருகும் மதுபான நிலையங்கள்: வலுக்கும் எதிர்ப்புகள் | Proliferation Of Bars In North East

இது புதிய மதுபானசாலை அல்ல. கடந்த காலங்களில் நெல்லியடியில் இயங்கிய மதுபான விற்பனை நிலையமே இங்கு இடமாற்றப்பட்டுள்ளது. ஆகவே அது பழைய இடத்திலேயே இயங்குவதில் ஆட்சேபனை இல்லை.

ஆனால் இந்த இடத்தில் இருந்து மதுபான விற்பனை நிலையம் அகற்றப்பட வேண்டும். இதற்கு அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.

வடக்கு கிழக்கில் சுற்றுலாவை விருத்தி செய்ய வேண்டுமானால் சுற்றுலா மையங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். மதுபானத்தை காட்டி எங்கள் பிரதேசங்களுக்கு சுற்றுலா பயணிகளை கொண்டுவர வேண்டிய தேவை இல்லை - என்றார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் 
ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021