மக்களை வியப்பில் ஆழ்த்திய முன்னாள் நிதியமைச்சரின் சொத்து விபரம் : என்ன வைத்துள்ளார் தெரியுமா..!
ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து அமைச்சுப்பதவியை பெற்றுக்கொண்டால் அவரின் சொத்து மதிப்பு எப்படி உயரும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
அதுவும் இந்தியாவில் மாநில அமைச்சர்கள் முதல் மத்திய அமைச்சரிகளின் சொத்துக்கள் எண்ணிலடங்காதவை.
நீண்டகாலமாக நிதியமைச்சராக இருந்தவரின் சொத்து
இப்படியான ஒரு நாட்டில் ஒரு மாநிலத்தில் நீண்டகாலமாக நிதியமைச்சராக இருந்த ஒருவர் 9.6 லட்சம் மதிப்பிலான 20 ஆயிரம் புத்தகங்களை மட்டுமே கைவசம் தனது சொத்தாக வைத்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அத்துடன் அவருக்கு வீடு மற்றும் நிலபுலங்கள் எதுவும் சொந்தமாக இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கேரளமாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் நிதி அமைச்சர் தோமஸ் ஐசக் என்பவரே இந்த சொத்துக்கு சொந்தக்காரர் ஆவார்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா நாடாளுமன்ற தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முன்னாள் நிதி அமைச்சர் தோமஸ் ஐசக் போட்டியிடுகிறார்.
வியப்பில் ஆழ்ந்த மக்கள்
தேர்தல் அதிகாரியான மாவட்ட கலெக்டரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் தனது வேட்புமனுவுடன் தாக்கல் செய்த சொத்து விவர பட்டியலிலேயே மேற்கண்ட விபரத்தை தெரிவித்துள்ளார்.
கேரளாவில் பல முறை நிதி அமைச்சராக இருந்த போதிலும் தனக்கென்று தனியாக நிதியை (சொத்தை) சேர்த்து கொள்ளாமல், அறிவை (புத்தகங்களை) மட்டும் சொத்தாக பாதுகாத்து வரும் அவரை அனைவரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |