கொழும்பில் அதிகளவில் விபத்தில் சிக்கும் மாணவர்கள் : கல்வியமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடும் போது, மக்கள் செறிவுள்ள கொழும்பில் பாடசாலை செல்லும் சிறுவர்கள் அதிக வீதி விபத்துக்களை எதிர்கொள்கின்றனர் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த(Susil Premajayantha),தெரிவித்தார்.
'பாடசாலை வீதி பாதுகாப்பு கழகம்' ( 'School Road Safety Club') என்ற பெயரில் உத்தியோகபூர்வமாக கல்வி அமைச்சு ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போது இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த அவல நிலையை மாற்ற உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு இதுபோன்ற வீதிப் பாதுகாப்புத் திட்டங்கள் பெரும் உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
கொழும்பு மாநகர சபை எல்லைக்குள்
"பெரும்பாலான நகர்ப்புற வாகன விபத்துக்கள் கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் நிகழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கொழும்பு வலயத்தில் மொத்தம் 144 பாடசாலைகள் உள்ளன, அவற்றில் 21 தேசியப் பாடசாலைகள் மற்றும் 20 சர்வதேச மற்றும் தனியார் பாடசாலை வகைகளின் கீழ் உள்ளன. மீதமுள்ள பாடசாலைகள் மேல்மாகாண சபையின் கீழ் உள்ளன” என்றார்.
"கொழும்பு மாநகரசபைக்குள் தினமும் 196,000 குழந்தைகள் பாடசாலைக்கு வருகிறார்கள். அந்த மாணவர்கள் சிசு சீரிய பாடசாலை சேவை, பாடசாலை வான்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் அவர்களது சொந்த குடும்ப தனியார் போக்குவரத்து முறைகள் போன்ற பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி பாடசாலைகளுக்கு வருகிறார்கள்," என்று அவர் கூறினார்.
நாட்டில் எங்கும் ஒழுக்கம் இல்லை
நம் நாட்டில் எங்கும் ஒழுக்கம் இல்லை. அதைச் சொல்வதற்கு நான் பயப்படவில்லை. எனவே சட்டங்கள் உருவாகும் இடத்தில் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க முடியாவிட்டால், நாட்டின் குழந்தைகளை எப்படி நெறிப்படுத்துவது.
"எனவே, நாம் பாடசாலையில் ஒழுக்கத்தைப் பயிற்சி செய்யத் தொடங்க வேண்டும். ஜப்பான் போன்ற ஒரு நாட்டில், முன்பள்ளி தரங்களில் ஒழுக்கம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. எங்கள் முன்பள்ளி அமைப்புகள் முற்றிலும் வேறுபட்டவை, மேலும் நாங்கள் எப்போதும் அவர்களுக்கு படிக்கவும் எழுதவும் எண்ணவும் கற்பிக்க முயற்சிக்கிறோம். இது அவர்களின் மூளையில் அதிக கனமாக உள்ளது," என்று அவர் குறிப்பிட்டார்.
சிறுவர்களை மையப்படுத்திய தகாத சம்பவங்கள்
இதற்கிடையில், நாட்டில் பதிவாகும் துஷ்பிரயோக சம்பவங்களில் பெரும்பாலானவை சிறுவர்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. இந்த நிலைமைக்கு முகநூல் முக்கிய காரணியாக உருவெடுத்துள்ளது.
முகநூல் உட்பட சர்ச்சைக்குரிய நிகழ்நிலை பாதுகாப்பு மசோதாவை நாடாளுமன்றம் நிறைவேற்றிய பிறகு, பல அமைச்சர்கள் அதற்கு எதிராகக் கத்த ஆரம்பித்தனர், ஆனால் அமெரிக்காவின் நாடாளுமன்றத்தில் கடும் விமர்சனங்கள் எழுப்பப்பட்டன; மெட்டா தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் மன்னிப்பும் கேட்டார். அந்த நிலை இலங்கையில் ஏற்பட்டால், அந்த நபரை சமூக வலைத்தளங்களில் மக்கள் பரப்புவார்கள் என தெரிவித்தார்.
images - daily mirror
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |