ஒரே நாளில் நடக்கவுள்ள இரண்டு தேர்தல் : தகவல் கசிந்ததாக கூறும் எம்.பி
இலங்கையில், அதிபர் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை ஒரே நாளில் நடாத்துவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தமக்கு அறிய கிடைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில (udaya gammanpila) அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில், அதிபர் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒரே நாளில் நடாத்துவதற்கு சட்டத்தில் எவ்வித தடையும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரணிலின் தேவை
அதிபர் தேர்தலை முதலில் நடத்துவதே ரணில் விக்ரமசிங்கவின் தேவையாக உள்ளதாகவும் ஆனால் அது அதிபரின் அதிகாரத்தை குறைக்கின்றது எனவும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அதேநேரம் முதலில் பொதுத் தேர்தலை நடத்துவதே பசில் ராஜபக்சவின் விருப்பமாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக அதிபர் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒரே நாளில் நடாத்துவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |