அரசியலமைப்பின் புதிய திருத்தத்திற்கான முன்மொழிவுகள் கையளிப்பு
20th Amendment
Sajith Premadasa
By Vanan
அரசியலமைப்பின் புதிய திருத்தத்திற்கான முன்மொழிவுகளை ஐக்கிய மக்கள் சக்தி சமர்ப்பித்துள்ளது. இந்த வரைபு இன்றைய தினம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதற்கான சட்டமூலத்தை கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவிடம் இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து கையளித்துள்ளார். அதன் பின்னர் குறித்த வரைவு சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறை ஒழிப்பு, கட்டுப்பாடுகள் மற்றும் சமநிலை முறை தொடர்பான முத்தரப்பு அதிகாரப் பகிர்வுக்கான திருத்தம், 20 ஆவது திருத்தத்தை இல்லாதொழித்தல், சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவுதல், தேசிய பாதுகாப்பு ஆணைக்குழுக்களை அமைத்தல் போன்ற பல ஜனநாயகப் பண்புகளை குறித்த வரைவு கொண்டுள்ளது.


4ம் ஆண்டு நினைவஞ்சலி