மின்கட்டண திருத்தம் : இன்று முதல் ஆரம்பமாகும் நடவடிக்கை

CEB Sri Lankan Peoples Sri Lanka Electricity Prices Public Utilities Commission of Sri Lanka
By Sathangani Feb 25, 2026 04:11 AM GMT
Report

2026 ஆம் ஆண்டிற்கான உத்தேச மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்வது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்ளும் பணிகள் பணிகள் இன்று (25) முதல் ஆரம்பமாவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் மின்சார நுகர்வோருக்கு மார்ச் 18 ஆம் திகதி வரை இதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் கோடி ரூபாய் செலவில் அநுரவின் மாநாடு...! ஊழல் ஒழிப்பு கொள்கைக்கு விழுந்த பலத்த அடி

யாழில் கோடி ரூபாய் செலவில் அநுரவின் மாநாடு...! ஊழல் ஒழிப்பு கொள்கைக்கு விழுந்த பலத்த அடி

மின் கட்டணத் திருத்தத்தின் இறுதி முடிவு

ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் 5 இடங்களில் வாய்மூலக் கருத்துகளை முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

மின்கட்டண திருத்தம் : இன்று முதல் ஆரம்பமாகும் நடவடிக்கை | Proposed Electricity Tariff Revision For 2026

இதற்கான முதலாவது அமர்வு மார்ச் 07 அம்பாறையிலும், மார்ச் 11 வவுனியாவில் கருத்துக்கேட்பு அமர்வு நடைபெறும், மார்ச் 12 மாத்தளை மாவட்டத்தில் இடம்பெறும், மார்ச் 16 அம்பாந்தோட்டையில் கருத்துக்களை முன்வைக்க முடியும், மார்ச் 18 இறுதியான வாய்மூல ஆலோசனை அமர்வு நடைபெறவுள்ளது.

பொதுமக்களினால் முன்வைக்கப்படும் அனைத்து முன்மொழிவுகளையும் பரிசீலித்த பின்னரே, மின் கட்டணத் திருத்தம் குறித்த தனது இறுதி முடிவை ஆணைக்குழு அறிவிக்கவுள்ளது.

தடைகளை வென்ற விழிப்புலனற்ற பட்டதாரிகள்: யாழ். பல்கலைக்கழகத்தில் சாதனை!

தடைகளை வென்ற விழிப்புலனற்ற பட்டதாரிகள்: யாழ். பல்கலைக்கழகத்தில் சாதனை!

  

இலங்கை மின்சார சபை

இதேவேளை, இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் செயன்முறையை அரசாங்கம் முறையாக முன்னெடுக்கத் தவறியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்பவியலாளர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

மின்கட்டண திருத்தம் : இன்று முதல் ஆரம்பமாகும் நடவடிக்கை | Proposed Electricity Tariff Revision For 2026

இதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று (25) எடுக்கப்படும் என சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்.பொது நூலக நிறுவுநரின் 130 ஆவது ஜனன தினம்

யாழ்.பொது நூலக நிறுவுநரின் 130 ஆவது ஜனன தினம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026