யாழில் இடம்பெறவுள்ள கையெழுத்து வேட்டை - ஓரணியில் திரள பகிரங்க அழைப்பு!
Tamils
Jaffna
Sri Lanka
SL Protest
By Kalaimathy
யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதால் அனைவரும் ஓரணியில் திரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டம் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பால் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
எதிர்வரும் 16 ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை தமிழர் மரபுரிமைகளை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது.
போராட்டத்திற்கு அழைப்பு
யாழ்ப்பாணம் நல்லை ஆதீன முன்றலில் இடம்பெறவுள்ள இந்த போராட்டம் அடையாள உண்ணாவிரத் போராட்டமாகவும், கையெழுத்துப் போராட்டமாகவும் இடம்பெறவுள்ளது.
இந்த போராட்டத்தை தமிழ் மக்கள் சார்ந்த தேசிய சக்திகள், சமய சமூக தன்னார்வ அமைப்புக்கள் என பல தரப்புக்கள் இணைந்து முன்னெடுக்கவுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி