தமிழர் மரபுரிமைகளை பாதுகாக்க ஒருங்கிணைந்த கட்டமைப்பாக எழுவோம் - அகத்தியர் அடிகளார்
இலங்கையின் வட-கிழக்கு அனைத்து பிரதேசங்களிலும் தொல்பொருள் ஆக்கிரமிப்புக்கள் இடம்பெறும் நிலையில் இதனை எதிர்கொள்ள சரியான பொறிமுறை ஒன்று அவசியமானது என தவத்திரு அகத்தியர் அடிகளார் கூறியுள்ளார்.
தமிழர்களின் சிவ வழிபாட்டு இடங்களை மாற்றியமைக்கும் செயற்பாடுகளில் அரசுக்கு அழுத்தம் கொடுக்க அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டுமெனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
சரியான பொறிமுறை
இது தொடர்பில் அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கையில் வட - கிழக்கின் அனைத்து பிரதேசங்களிலும் தொல்பொருள் திணைக்களம் ஆக்கிரமிப்புக்களை மேற்கொள்ளும் நிலையில், அதனை எதிர்கொள்ள சரியான பொறிமுறை ஒன்றை அனைத்து தமிழ் தரப்புக்களும் இணைந்து மேற்கொள்வது அவசியமானது.
பல்கலைக்கழக சமூகத்தினது பங்களிப்பு புலமைசார் தளத்தில் அத்தியாவசியமானது.
அதே போன்று சட்டரீதியாக பிரச்சினைகளை எதிர்கொள்ள சட்டவாளர்களின் பங்களிப்பு பலம் சேர்க்கும்.
தமிழ் தேசிய செயற்பாட்டாளர்கள் , பல்கலை உள்ளிட்ட உயர் கல்வி மாணவர்கள் போராட்டங்களை மக்கள் சார்ந்தாக ஒழுங்கமைக்க வேண்டும்.
ஒருங்கிணைந்த கட்டமைப்பு
அரசியல்வாதிகள் தொடர் அழுத்தத்தை அரசுக்கு வழங்குவதுடன் நாடாளுமன்றை புறக்கணித்தல் உட்பட ஒத்துழையாமை இயக்கத்திற்கு தயாராக வேண்டும்.
அமைப்புசார் நிலையில் இயங்கும் அனைவரும் அமைப்புக்ளின் தனித்துவங்களை பேணும் அதே நேரம் மக்களின் நலனுக்காக ஒருங்கிணைந்த கட்டமைப்பாக செயற்பட வேண்டும்” என அகத்தியர் அடிகளார் கூறியுள்ளார்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)